ePrivacy and GPDR Cookie Consent by TermsFeed Generator இலங்கை காற்றழுத்தமானி

இலங்கை காற்றழுத்தமானி

இலங்கை

காற்றழுத்தமானி

"ஸ்ரீ லங்கா பரோமீட்டர் (Sri Lanka Barometer): எங்கள் குரல்கள், எங்கள் தெரிவுகள்

என்பது இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமை பற்றிய புரிதலை ஆழமாக்குவதை நோக்கமாகக் கொண்டு பொதுச் சொற்பொழிவுகளைத் தெரியப்படுத்துவதுடன், தீர்மானமெடுப்பவர்களுக்கு அதை நிறைவேற்றுவதற்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமை குறித்து மக்களிடையே உள்ள பல்வேறு கருத்துக்களை உள்ளடக்குவதன் மூலம் அது நல்லிணக்கம் என்பது பன்முகத்தன்மை கொண்டதுடன் அது சூழல் சார்ந்ததாகவும் மற்றும் பரந்த அளவிலான அனுபவங்கள், முயற்சிகள் மற்றும் வாய்ப்புகளை உள்ளடக்கியதாகவும் உள்ளது என்பதை அங்கீகரிக்கிறது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தது முதல், முக்கியமான விடயங்கள் தொடர்பான மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய முன்னேற்றத்தை இலங்கைப் பிரஜைகள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை அறிவது மிகவும் முக்கியமானது. இது நல்லிணக்கம் குறித்த பொதுப் பார்வையைப் பெற உதவுவதுடன் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டத் தலையீடுகள் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை எவ்வாறு பாதித்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

 

குடிமக்களின் மனப்பான்மை மற்றும் உணர்வுகள் முறையாக உள்வாங்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டுப் பரப்பப்படுகின்றன. நல்லிணக்கம் குறித்த பொதுக் கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வானது,  பல தளங்கள் மற்றும் பரப்புதல் செயல்பாடுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றது. உரையாடலில் ஈடுபடுவதானது, நல்லிணக்கத்தை நோக்கிய செயல்களில் செல்வாக்கு செலுத்த உதவும் சிறந்த தகவலறிந்த பொதுச் சொற்பொழிவினை உருவாக்குகிறது.

ஸ்ரீ லங்கா பரோமீட்டர் (Sri Lanka Barometer) பின்வரும் நான்கு முக்கிய கூறுகளை உள்ளடக்கியுள்ளது:

  1. பொதுமக்கள் நோக்கினை அளவிடும் வருடாந்த, நாடளாவிய பொதுக் கருத்துக்கணிப்பு.
  2. நல்லிணக்கம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு தொடர்பான சிக்கல்களை இன்னும் ஆழமாக ஆராய்வதற்கு பெருமளவில் தரமான வழிமுறைகளைப் பயன்படுத்தும் கருப்பொருள் ஆய்வுகள்.
  3. நல்லிணக்கம் மற்றும் தொடர்புடைய பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல் பத்திரங்கள் மற்றும் கருத்துக் குறிப்புகளின் தொகுப்பு.
  4. ஆதார அடிப்படை பற்றிய பொதுச் சொற்பொழிவைத் தெரிவிப்பதற்கான ஒரு அணுகல் கூறு

 

ஸ்ரீ லங்கா பரோமீட்டர் (Sri Lanka Barometer) கருத்தாக்கத்தின் ஒரு பகுதியாக, இலங்கை முழுவதும் சமூக ஆலோசனைகள் நடத்தப்பட்டதுடன் மற்றும் நிபுணர் கலந்துரையாடல், நல்லிணக்கம் குறித்த மக்களின் எண்ணங்கள் மற்றும் அனுபவங்கள் வேறுபட்டவை, ஆற்றல்மிக்கவை மற்றும் மிகவும் தனிப்பட்டவை என்பதைக் காட்டுகிறது. இந்த முயற்சிகள் எட்டு களங்களின் ஊடாக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை ஆராய்வதற்கான முடிவிற்கு வழிவகுத்தது, இது இலங்கையில் இவற்றை அடைவதற்கான தடைகள் மற்றும் இடைவிடாத இடைவெளிகளை ஆராய்வதுடன், கூட்டாக இந்தக் கருத்துக்களை உள்ளடக்கியது. இந்தக் களங்கள் ஒன்றுக்கொன்று பிரத்தியேகமாக கருதப்படாமல் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.

 

பரோமீட்டரிலிருந்து உருவாக்கப்படும் அனைத்து பொருட்களும் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. நல்லிணக்கச் செயற்பாட்டின் பின்னணியில் மற்றும் குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் இலங்கைச் சூழலிலுள்ள 8 களங்களுக்குள் முக்கியமான விடயங்கள் மீதான பொதுக் கலந்துரையாடலைத் தூண்டுவதற்கு ஆதார உருவாக்கத்தின் பெறுபேறுகள் பயன்படுத்தப்படும். இதற்கு அப்பால், ஆதாரங்களை பரந்த அளவிலான பங்குதாரர்கள் பயன்படுத்தலாம். பெறுபேறுகளைப் பயன்படுத்தக்கூடிய பங்குதாரர்களில் அரச நிறுவனங்கள், அபிவிருத்தித் துறை நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் பொது மக்களும் அடங்குவர்.

 

ஸ்ரீ லங்கா பரோமீட்டரின் (Sri Lanka Barometer) அமுலாக்கமானது, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கான புரிதல் மற்றும் எதிர்பார்ப்புகளை ஆழமாக்குவதற்கான சான்றுகளை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கும் வகையில் இலங்கையில் பல பங்குதாரர்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கூட்டமைப்பை உருவாக்குவதை உள்ளடக்கியது.

2017 நவம்பரில் ஆரம்பிக்கப்பட்ட நான்கு வருட வேலைத்திட்டமான நல்லிணக்க வலுவூட்டல் செயல்முறைகள் (SRP) மூலம் இது ஆரம்பிக்கப்பட்டது. SRP வேலைத்திட்டமானது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மன் பெடரல் வெளியுறவு அலுவலகத்தால் கூட்டாக நிதியளிக்கப்படுவதுடன்  இலங்கையிலுள்ள ஜேர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு (GIZ) மற்றும் பிரிட்டிஷ் கவுன்சிலால்  நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.

குறிப்பாக தென்னாபிரிக்காவில் உள்ள நல்லிணக்க அனுபவம் மற்றும் இந்த ஈடுபாட்டில் பொதுமக்களின் பார்வையைப் பயன்படுத்துவதன் மூலம் சர்வதேச அனுபவங்கள் மற்றும் ஒத்த முன்னெடுப்புக்களுக்கான இணைப்புகளை கூட்டமைப்பு செயல்படுத்துகிறது. தென்னாபிரிக்நீதி மற்றும் நல்லிணக்க நிறுவத்தால் (Institute of Justice and Reconciliation in South Africa) இரண்டு தசாப்தங்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட தென்னாபிரிக்க நல்லிணக்க பரோமீட்டரைச் (South Africa Reconciliation Barometer) செயல்படுத்துவது இதில் அடங்கும். இலங்கை வறுமைப் பகுப்பாய்விற்கான மத்திய நிலையம் (Centre for Poverty Analysis), மற்றும் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் (செயலிலுள்ளது) ஆகியன தற்போது கூட்டமைப்பில் ஏனைய பங்காளிகளாக உள்ளன.

FAQ

1. ஸ்ரீ லங்கா பரோமீட்டர் (Sri Lanka Barometer) கருத்துக் கணிப்பினை மேற்கொள்வதற்கான காரணங்கள் என்ன? இந்த ஆய்வின் நோக்கம் என்ன?

இலங்கையில் இடம்பெற்ற ஆயுத மோதல் மற்றும் 2009 இல் யுத்தம் முடிவடைந்தமை அனைத்து குடிமக்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் இன, மத, மொழி மற்றும் பொருளாதார அடிப்படையில் ஒரு சமூகம் ஆழமாக பிளவுபட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்தது முதல், இலங்கையும் அதன் குடிமக்களும் மத ரீதியாகவும் இன ரீதியாகவும் தூண்டப்பட்ட பல நிகழ்வுகளை எதிர்கொள்கின்றனர், இவை அனைத்தும் நாட்டின் அமைதியை அனுபவிக்கும் திறனைப் பாதித்தன. ஒரு தேசமாக முன்னோக்கிச் செல்வதற்கும், மோதலால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் சிதைந்த வாழ்வை மீட்டெடுப்பதற்கும், இலங்கை பல்வேறு முயற்சிகள் மூலம் வலுவான அர்ப்பணிப்பை மேற்கொண்டதுடன் மற்றும் சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு கணிசமான வளங்களை ஒதுக்கியது.

2. ஸ்ரீ லங்கா பரோமீட்டருக்குப் (Sri Lanka Barometer) பயன்படுத்தப்படும் நல்லிணக்கத்திற்கான வரைவிலக்கணம் ஒன்றுள்ளதா?

பரோமீட்டரானது (Barometer) நல்லிணக்கத்தின் பின்னணியில் உள்ள அனைத்து முக்கியமான பிரச்சினைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது அளவுரீதியான ஆய்வு மூலம் அளவிடப்படுகிறது. கணக்கெடுப்பு நல்லிணக்கத்தை வரையறுக்க முயற்சிக்கவில்லை. கருத்துரீதியாகவும் அனுபவமாகவும், நல்லிணக்கம் என்பது பன்முகத்தன்மை கொண்டது, எனவே எந்த ஒரு வரைவிலக்கணமும் சாத்தியமாகாது. மேலும், இது சூழல் சார்ந்ததாகவுள்ளதுடன் பரந்த அளவிலான அனுபவங்கள், முயற்சிகள் மற்றும் வாய்ப்புகளை உள்ளடக்கியதாகும். நல்லிணக்கம், சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் சமூக ஒற்றுமை பற்றிய சர்வதேச மற்றும் உள்ளூர் இலக்கியங்களிலிருந்து இது தெளிவாகிறது.

நல்லிணக்க வலுவூட்டல் செயல்முறைகளினால் (SRP) பெறுபேறுகள்/ கண்டுபிடிப்புகள் / தரவு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? பெறுபேறுகளை யார் பயன்படுத்தலாம்? பெறுபேறுகள் பொது மக்களுக்கு கிடைக்குமா? இந்தத் தரவு செல்லுபடியாகும்/ கல்வி நோக்கங்களுக்காகவும் மேலதிக ஆய்வுக்காகவும் உள்ளதா?

இந்த கருத்துக்கணிப்பின் பெறுபேறுகள் /கண்டுபிடிப்புகள்/தரவுகள், குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் இலங்கையில் நல்லிணக்கச் செயல்முறையின் பின்னணியில் உள்ள முக்கியமான பிரச்சினைகள் குறித்த பொது விவாதத்தைத் தூண்டுவதற்கு SRP இனால் பயன்படுத்தப்படும்.

இதையும் தாண்டி, கருத்துக்கணிப்பின்  பெறுபேறுகளை பரந்த அளவிலான அக்கறையுள்ளோர் பயன்படுத்தலாம். பெறுபேறுகளைப் பயன்படுத்தக்கூடிய அக்கறையுள்ளோரில்  அரநிறுவனங்கள், அபிவிருத்தித் துறை நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் பொது மக்களும் அடங்குவர்.

பெறுபேறுகள் எழுத்துமூலமான அறிக்கை மற்றும் சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு நிகழ்நிலை வளங்கள் மற்றும் SRP இணையத்தளம் வழியாக வினாக்கொத்துடன் கிடைக்கும். இந்த வளங்கள் மும்மொழிகளிலும் கிடைக்கும்.

சிக்கல்களின் உணர்திறன் காரணமாக வெளிப்புற பயன்பாட்டிற்கு மூலத் தரவுத்தொகுப்பு கிடைக்காது. இருப்பினும், தரவைப் பயன்படுத்துவதற்கான விசாரணைகள் ஒவ்வொரு விடயத்தின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும்.

சில குழுக்கள் தங்கள் நிலைப்பாட்டை / நிலைமையை நியாயப்படுத்த முடிவுகளைப் பயன்படுத்தலாமா?

போலிச் செய்திகள் மற்றும் முற்றிலும் ஆதாரமற்ற பொய்கள் நிறைந்த இந்த யுகத்தில், எந்த வழியும் இல்லாத குடிமக்களின் குரலை தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் கேட்கவும் இந்த கணக்கெடுப்பு அனுமதிக்கும். கருத்துக்கணிப்பு நல்லிணக்கத்தின் பின்னணியில் பரந்த அளவிலான பிரச்சினைகளில் மக்களின் கருத்துக்களைக் கொண்டிருக்கும் மற்றும் இந்த பிரச்சினைகளில் மக்கள் எவ்வாறு உண்மையாக உணருகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும். பொது களத்தில் கிடைக்கும் செய்திகள் மற்றும் தகவல்களைப் போலவே, அது மேலும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு தவறாகப் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், பயன்பாடு கண்காணிக்கப்படுவதையும், முடிவுகளின் பயன்பாடு தொடர்ந்தும் ஆவணப்படுத்தப்படுவதையும் நாம் உறுதிப் படுத்துவோம்.

கருத்துக்கணிப்பு மக்களின் அன்றாட வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்? ஸ்ரீ லங்கா பரோமீட்டர் (Sri Lanka Barometer)மூலம் மக்கள் என்ன பெற முடியும்?

ஸ்ரீ லங்கா பரோமீட்டரை (Sri Lanka Barometer) நடைமுறைப்படுத்துவது நல்லிணக்கம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து உள்ளீடுகளைப் பெறுவதற்கான வாய்ப்பாகும். இந்த உள்ளீடுகள் இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்க அக்கறையுள்ளோர் உட்பட பல அக்கறையுள்ளோரால் அமைக்கப்பட்டுள்ள செயல்முறைகளைத் தெரிவிக்கப் பயன்படும். நல்லிணக்க செயல்முறைகளுக்குள் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுடன் ஈடுபடும் அனுபவங்கள் உட்பட நல்லிணக்கம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

உதாரணமாக, மோதல் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், நமது சமூகத்தில் சமத்துவமின்மையின் வளர்ச்சியில் இனப் பிளவு உள்ளவர்களிடையே ஒரே மாதிரியான/பல்வேறு கருத்துகளைக் கொண்டிருப்பதைக் கண்டறிவது சிந்திக்கத் தூண்டுவதாக இருக்கலாம். அல்லது போரினால் நேரடியாகப் பாதிக்கப்படாத பிரதேசங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் அரசியல்வாதிகள் இல்லையென்றால் நாம் அனைவரும் நன்றாகப் பழகுவோம் என்று நம்புகிறார்கள்.